2025 மே 20, செவ்வாய்க்கிழமை

இலங்கை கல்வி சாரா ஊழியர்கள் ஒன்றியத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்

Sudharshini   / 2015 மார்ச் 07 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

இலங்கை கல்வி சாரா ஊழியர்கள் ஒன்றியத்தின் வருடாந்த பொதுக்கூட்டம், மட்டக்களப்பு மாவட்ட கிளையின் உபதலைவர் டி.கமிலேஸ் தலைமையில் கடந்த வியாழக்கிழமை (05) பிற்பகல்  மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் நடைபெற்றது.

இதேவேளை, பெரும் குழப்பங்களுக்கு மத்தியில் நடைபெற்ற இக்கூட்டமானது முடிவுகள் எட்டப்படாத நிலையில் நிறைவடைந்ததாக அதன் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இந்த சங்கம் பல ஊழல்களுக்கு மத்தியில் இயங்கிவருகின்றது. எனவே, நிர்வாக சபையினர் தங்களது பதவிகளை விடுத்து புதியவர்களை நியமிக்கவேண்டும் என  கோரிக்கை விடுத்துள்ள மட்டக்களப்பு கிளை உறுப்பினர்கள், இலங்கை கல்வி சாரா ஊழியர்கள் ஒன்றியத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையினை புனரமைப்பதுக்கு தேவையான நடவடிக்கையினை தாய் சங்கம் மேற்கொள்ளவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், கடந்த ஜனாதிபதித் தேர்தல்களின்போது  கட்சி உறுப்பினர்களின் அனுமதியின்றி அரசியல் கட்சி ஒன்றுக்கு ஆதரவு தெரிவித்தமை தொடர்பிலும் இங்கு அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X