2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கடையிலிருந்த பணம் மற்றும் சிகெரட் திருட்டு

Sudharshini   / 2015 மார்ச் 07 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் 4ஆம் குறிச்சிப் பகுதி பிரதான வீதியிலுள்ள கடையொன்றினை உடைத்து பணம் மற்றும் சிகெரட்  திருடப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் சனிக்கிழமை (07) முறைபாடு செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

செங்கலடி ரமேஷ்புரம் பதியைச் சேர்ந்த ரீ. தயாபரன் (வயது 32) என்பவரின் கடையே இவ்வாறு உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை இரவு (06) இரவு 9 மணிக்கு கடையை பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்று, தான் சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு கடைக்கு வந்து பார்த்தபோது கடையின் பின் கதவு மற்றும் முன் கதவுகள் உடைக்கப்பட்டு, தனது கடையிலிருந்த இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணமும் 10 கோல்ட் லீப் சிகெரட் பக்கெட்டுகளும் திருடப்பட்டுள்ளதாக அவர் பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிட்டிருந்தார்.

இச்சம்பவம் குறித்து ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X