2025 மே 20, செவ்வாய்க்கிழமை

விபத்தில் இருவர் காயம்

Thipaan   / 2015 மார்ச் 07 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி பிரதான வீதியில் நேற்றிரவு (06) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு 8.30 மணியளவில் காத்தான்குடி ஆறாம் குறிச்சி பிரதான வீதியில் வைத்து மீராபாலிகா மகா வித்தியாலயத்துக்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காத்தான்குடி அமானுல்லாஹ் வீதியிலிருந்து பிரதான வீதியை கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிளுடன் பிரதான வீதி வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

இதில் படுகாயமடைந்த இருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த  இருவரும் காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள் எனவும் இது தொடர்பான விசாரணைகள் இடம் பெற்றுவருவதாகவும் காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X