Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Sudharshini / 2015 மார்ச் 07 , மு.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-த.நவோஜ்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கிழக்கு மாகாண ஆட்சியிலிருந்து துரத்த எத்தணித்துவர்களுடன் இணைந்து ஆட்சி அமைப்பது நிலையானதாக இருக்காது என்ற காரணத்தினாலேயே நாம் உடன்படிக்கையின் பிரகாரம் முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்திருக்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு முனைத்தீவு மேன்பவர் விளையாட்டுக் கழகத்துக்கு பொருட்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணத்தில் இந்த மூன்று மாதத்திற்குள் பலர் கபடத்தனமாக ஆட்சி அதிகாரத்தினைப் பெற முயற்சித்தார்கள். ஆனால், அவர்களின் முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டன. கிழக்கு மாகாண சபையில் எமது நடவடிக்கை புதிய பரிணாமம் பெற்றுள்ளது. இதனை எமது மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைக்கக் கூடாது என்று நினைத்தவர்கள் மறுபடியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரிடம் மண்டியிட்டார்கள். தாம் எங்களுடன் வந்து இணைவதாகவும் எமக்கு முதலமைச்சுப் பதவியைத் தருவதாக தெரிவித்து கபட நாடகத்தினை நிகழ்த்தினார்கள்.
இதன்போது தலைவர் சம்மந்தன், தான் இது தொடர்பில் முடிவினை மேற்கொள்ள முடியாது எனவும் எமது மாகாண சபை உறுப்பினர்களே இதனை தீர்மானிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இதுதான் எமது தலைமையின் பண்பு.
நாங்கள் அதிகாரப் பரவலாக்கத்தினைக் கேட்பவர்கள். அப்படி ஒரு கொள்கையுடன் இருக்கும் நாங்கள் இன்று ஒரு தமிழ் பேசும் சமூகத்துடன் இணைந்துள்ளோம். அவர்கள் எமக்கு துரோகங்களைச் செய்திருந்தாலும் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகம் இருப்பதால் நாம் அவர்களுடன் சேர்ந்திருக்கின்றோம். ஆனால், அவர்களிடம் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் மண்டியிட போவதில்லை.
எமது தாயகம் வடகிழக்கு நிரந்தரமாக இணைக்கப்பட வேண்டும். இந்த நாட்டில் பிரிவினை இல்லாமல், உள்ளக சுயாட்சி முறைமையினை ஏற்று மக்கள் தங்கள் ஆதரவினை வழங்க வேண்டும் என்ற பல எண்ணப்பாடுகளுடனேயே நாம் தற்போது மு.கா.வுடன்; கைகோர்த்துள்ளோம்;. எனவே எமது ஒற்றுமையும் எமது பலமும் சேரும் பட்சத்தில் நாம் யாரிடமும் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது என அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago