Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Sudharshini / 2015 மார்ச் 07 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தமிழ் மக்களின் வாக்குப்பலத்தின் மூலமே வெற்றிவாகை சூடியிருக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு அரசடித்தீவு விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்தில் வியாழக்கிழமை (05) நடைபெற்ற விளையாட்டுப்போட்டியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தனித்துவ கட்சியான தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு, மக்கள் நலன்சார்ந்த விடயங்களில் அதீத அக்கறை காட்டி சேவை செய்து வருகின்றது.
அதனடிப்படையில், தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் 2009இல் மௌனிக்கப்பட்டிருந்தாலும் அதற்கு பின்னர்; த.தே.கூட்டமைப்பு சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவினைப்பெற்ற கட்சியாக இருந்தது.
எமது மக்களின் தளராத கொள்கையின் அடிப்படையிலே தான் எமது கட்சி இன்று சர்வதேச ரீதியாக தமிழ் மக்களுக்கான நீதியினை கேட்டு போராடி வருகின்றது. இப்போராட்டத்தின் மூலம் எங்களை நாங்களே பலப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் எமது இலக்கை நோக்கி நகர முடியும்.
தேர்தல் காலங்களில் தமிழ் மக்கள் விடும் சிறு தவறுகள் காலம் கடந்த பின்னர் பெரும் தவறுகளாக எம் கண்ணுக்கு புலப்படுவதனை காணமுடிகின்றன. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு கிழக்கு மாகாணசபையில் நடைபெற்ற நடவடிக்கையினை குறிப்பிடலாம். அன்று மக்கள் சரியாக சிந்தித்து செயற்பட்டிருக்க வேண்டும். எனவே இந்த தவறை மீண்டும் ஒருமுறை செய்யாமல்; அவதானமாக செயற்பட வேண்டும்.
தமிழ் மக்களுக்கான தனித்துவம், நடை, உடை, பாவனை, கலை, பண்பாடு, வாழ்வியல், சடங்கு, சம்பிரதாயம் போன்றவற்றினை காப்பாற்றி வருகின்றோம். ஆனால் அரசியலில் மாத்திரம் தமிழர்களது தனித்துவத்தினை இழந்திருக்கின்றோம். இதனை இழந்ததன் காரணமாகத்தான் இன்று கிழக்கு மாகாண சபையினை இழந்திருக்கின்றோம் என்பதனை தற்போது நடைபெற்றிருக்கும் ஆட்சி அமைப்புமூலம் உணரமுடிகின்றது. இவற்றை கருத்திற்கொண்டு எதிர்காலத்தில் செயற்படுவோமேயானால் எமது இலக்கை அடையமுடியும் என அவர் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago