2025 மே 20, செவ்வாய்க்கிழமை

இனிப்பான விடயங்களை தெளிவுபடுத்துவதே நல்ல தலைமைக்கு அழகு: துரைராஜசிங்கம்

Sudharshini   / 2015 மார்ச் 07 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-த.நவோஜ்

நடந்து முடிந்த கசப்பான விடயங்களை மறந்து எமது மக்களுக்கு இனி நடக்கவிருக்கும் இனிப்பான விடயங்களையே தெளிவுபடுத்த வேண்டும். இதுதான் நல்ல தலைமைக்கு அழகு என கிழக்கு மாகாண விவசாய மற்றும் கால்நடைகள் அமைச்சரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு முனைத்தீவு மேன்பவர் விளையாட்டுக் கழகத்துக்கு வியாழக்கிழமை பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

எமது மாகாண சபை விவகாரம் தொடர்பில் ஊடகங்களும் பல உத்திகளை கையாண்டிருந்தமையை காணக் கூடியதாக இருந்தது. அதிலும் அவ்வுத்திகள் ஒரு தரப்பினை மாத்திரமே வெளிப்படுத்துவதாக காணப்பட்டன.குறிப்பாக  சில ஊடகங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டமையை காணக்கூடியதாக இருந்தன.

ஊடகவியலாளர்கள் செய்தி ஒன்றினை அதன் உச்ச நிலைக்கு எடுத்துச் சென்று அதற்கு மக்கள் மத்தியில் ஆர்வத்தினை ஏற்படுத்தி ஒரு தொடர்த்தன்மையினை ஏற்படுத்தி விடுகின்றார்கள் அப்படித்தான் குறிப்பிட்ட காலத்தில் செய்திகள் வெளிவந்தன. இருப்பினும் ஊடகங்கள் பல உத்திகளைப் பயன்படுத்தி மக்களுக்கு நியாய பூர்வமான செய்திகளையும் வெளியிட்டிருந்தார்கள். தற்போது எல்லா விடயங்களும் மக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

எதுவாக இருந்தாலும் எமது அரசியல் பயணத்தில் புதிய அத்தியாயங்கள் திறக்கப்பட்டதுடன் அவற்றில் சில வித்தியாசங்களும் தோற்று விக்கப்பட்டுள்ளனன. எமது அரசியல் பயணம் 1949ஆம் ஆண்டு தொடக்கம் 1965ஆம் ஆண்டு வரை ஒரு ஓட்டமான அரசியல் பயணமாக இருந்தது.அதன் பின் 1965 தொடக்கம் 1970ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் எமது கட்சி தேசிய அரசாங்கத்தில் உறுப்பினராக இருந்தது பின்னர் 1970 தொடக்கம் 2014 வரை ஒரு விதமான வீச்சு அரசியல் நிலை இடம்பெற்றது.

அதிலும் 2014 இறுதி ஒன்றரை மாதங்களும் ஒரு அரசியல் மாற்றத்தினை வேண்டி எமது அரசியல் பயணம் நிகழ்ந்தது. பின் ஜனவரி 8ஆம்; திகதிக்கு பின்னர் தற்போதைய சூழ்நிலையில் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றத்துக்கு நாம் பங்காளிகள்; என்ற உணர்வோடு செயற்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

தற்போது நல்லிணக்க அரசியல் என்ற வகையில் கிழக்கு மாகாண சபையிலும் நாம் பேசுகின்ற அரசியல் நல்லிணக்கம் இருக்க வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் சில விடயங்களை நாம் அவதானித்து மேற்கொள்ள வேண்டும். நடந்து முடிந்த கசப்புகளை மறந்து மக்களுக்கு இனி நடக்கவிருக்கும் இனிப்பான விடயங்களையே தெரிவிக்க வேண்டும். இதுதான் நல்ல தலைமைக்கு அழகு.

அந்த வகையில் தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் பங்காளிகள் நாம் என்பதனால் எமது உரிமைகளை நாம் விட்டு கொடுக்க முடியாது. கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த மட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களின் நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டே எமது தலைவர் எமது முடிவுகளுக்கு பச்சைக் கொடி காட்டினார்.
அவர் இது தொடர்பில் மிகச் சிறப்பான வழிகாட்டியாக இருந்திருந்தார். இது தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குரிய பெருமை. எமக்குள் எத்தனை முரண்பாடுகள் ஏற்பட்டாலும் தேசியம் என்ற ரீதியில் எமது கசப்புகளை மறந்து இணைவோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை எந்தவகையிலும் நலிவடைய செய்ய முடியாது என அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X