Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Sudharshini / 2015 மார்ச் 07 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
–வடிவேல் சக்திவேல்
இலங்கை வங்கியின் கொக்கட்டிச்சோலை கிளையின் புதிய கட்டடத் தொகுதியின் திறப்பு விழா வங்கிக் கிளை முகாமையாளர் எஸ்.அரவிந்தன் தலைமையில் புதன்கிழமை (04) நடைபெற்றது.
இக்கட்டடத்தினை வைபவரீதியாக இலங்கை வங்கியின் கிழக்கு மாகாண உதவி பொது முகாமையாளர் கே.பி.ஆனந்தநடேசன், மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்தினம், பிரதேச முகாமையாளர் சிந்துஜா மார்டின், கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன், இலங்கை வங்கி காத்தான்குடி முகாமையாளர் ஆகியோர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது புதிய பணவைப்புக்கள், கணக்கு புத்தகங்கள் வழங்கல், கடன் வழங்கல், நிலையான வைப்புக்களுக்கான சான்றிதழ்கள் வழங்கல் போன்ற சேவைகள் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இத்திநப்பு விழா நிகழ்வில், மண்முனை தென்மேற்கு பிரதேச சபை செயலாளர் ந.கிருஸ்ணபிள்ளை, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பொறுப்பதிகாரி பெர்னாண்டோ, கொக்கட்டிச்சோலை மக்கள் வங்கி முகாமையாளர், பிரதேச அபிவிருத்தி வங்கி முகாமையாளர், காத்தான்குடி இலங்கை வங்கி முகாமையாளர், பாடசாலைகளின் அதிபர்கள், வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago