2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சிறுவர் சந்தை நிகழ்வு

Sudharshini   / 2015 மார்ச் 10 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, மாமாங்கம் சதாசகாய மாதா பாலர் பாடசாலை மாணவர்களின் சிறுவர் சந்தை நிகழ்வு திங்கட்கிழமை (09)  நடைபெற்றது.

பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் உளவளத்தினை மேம்படுத்தும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

இதன் ஆரம்ப நிகழ்வில் மாமாங்கம் சதாசகாய மாதா ஆலயத்தின் அருட்தந்தை பேதுரு ஜீவராஜ் அடிகளார் கலந்துகொண்டார்.

மட்டக்களப்பில் சிறப்பான முறையில் இயங்கிவரும் பாலர் பாடசாலையான சதாசகாய மாதா பாலர் பாடசாலை, சிறுவர்களின் மேம்பாட்டுக்காக பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.

குறிப்பாக சிறுவர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள், பரிசளிப்பு நிகழ்வுகள், சுற்றுலா, சமய நிகழ்வுகள் உட்பட பல்வேறு நிகழ்வுகளை நடத்திவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X