Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 10 , மு.ப. 09:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
இந்த நாட்டை மஹிந்த அரசாங்கம் மிக மோசமான நிலைக்கு கொண்டுசென்றது. பாதாளத்தில் இந்த நாடு காணப்பட்டது. இந்த நிலையிலிருந்து தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நாட்டை மீட்டெடுத்துள்ளார் என்று காணி அமைச்சர் எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி உறுதிகள் மற்றும் காணி அனுமதிப்பத்திரங்கள் அற்றோருக்கு அவற்றை வழங்கும் நடவடிக்கை, கல்லடி கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கைகள் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,
'இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்துக்கு மூன்று சாரார் காரணம் ஆவர். அதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர்; ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரே இந்த ஆட்சி மாற்றத்தின் பிரதான பங்காளிகள் ஆவர்.
காணி அற்றவர்களுக்கு இந்த அரசாங்கம் காணிகளை வழங்கவுள்ளதுடன், காணி உறுதிப்பத்திரங்கள்; அற்றவர்களுக்கும் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கிவருகின்றது.
குடும்ப ஆட்சியிலிருந்து இந்த நாட்டை மீட்டெடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நல்லாட்சிமிக்க ஆட்சி மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. இந்த நல்லாட்சி மிக்க மைத்திரி அரசாங்கத்தை பலப்படுத்த அனைவரும் முன்வரவேண்டும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago