2025 மே 20, செவ்வாய்க்கிழமை

காணி உறுதிகள், காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2015 மார்ச் 10 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்,வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி உறுதிகள் மற்றும் காணி அனுமதிப்பத்திரங்கள் அற்றோருக்கு அவற்றை வழங்கும் நடவடிக்கை, கல்லடி கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கைகள் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (10)  நடைபெற்றது.

இந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமுள்ள 3,500  பேருக்கு காணி உறுதிகள் மற்றும் காணி அனுமதிப்பத்திரங்களை வழங்கிவைத்தார்.

இதில் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் எம்.கே.டி.எஸ்.குணவர்தன,  கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, சீ.யோகேஸ்வரன் மற்றும் மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், மாகாண காணி அமைச்சர் ஆரியவதி கலப்பதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இலங்கையில் 30,684 பேருக்கான காணி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் காணி உறுதிகள் வழங்கும் திட்டத்தின் கீழ்,  சம்மாந்துறையில் 1,500 பேருக்கு  திங்கட்கிழமை (9) வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X