2025 மே 20, செவ்வாய்க்கிழமை

புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி

Gavitha   / 2015 மார்ச் 10 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாவட்ட புற்றுநோய் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் வியாழக்கிழமை (12) புற்றுநோய் விழிப்புணர்வுப் பேரணியொன்று நடத்தப்படவுள்ளதாக, சங்கத்தின் தலைவர் டாக்டர் என். சயனொளிபவன் தெரிவித்தார்.

கல்லடிப் பாலம் முதல் நகரிலுள்ள காந்திப் பூங்கா வரையில் இந்த விழிப்புணர்வுப் பேரணி நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேரணியில், மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள், கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவபீடம், மற்றும் தாதியப்பயிற்சியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பங்கு பெறவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X