Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 மார்ச் 10 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
பொதுத் தேர்தலுக்குப் பின் அமையவிருக்கின்ற புதிய அரசாங்கத்தின் மூலம் ஒரு இலட்சம் பேருக்கு அரச நியமனங்களை வழங்கும் வகையில் ஆளணித் தேவைகளை உருவாக்க, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று சுகாதார சேவைகள் ராஜாங்க அமைச்சர் எம்.ரீ. ஹஸன் அலி தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு ஞாயிற்றுக்கிழமை (08) விஜயம் செய்த அவர் வைத்தியசாலையின் குறைநிறைகளைக் கேட்டறிந்த பின் இதனைத் தெரிவித்தார்.
வைத்தியசாலை அத்தியட்சகர் எம்.எச்.எம். தாரிக் தலைமையிலான வைத்தியசாலை அபிவிருத்திக் குழு, வைத்தியசாலை அபிவிருத்தி செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, தேவைகள் அடங்கிய மகஜரைக் கையளித்தது.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
'ஒரு மாத காலத்துக்கள் ஆளணி விடயங்களை மட்டும் ஆராய்வதற்காக ஒரு மாநாட்டைக் கூட்டுமாறு அமைச்சின் செயலாளரை நாங்கள் பணித்திருக்கின்றோம்.
அந்தக் குழு கூடும்போது, கிழக்கு மாகாண சபை முதல்வர் உட்பட ராஜாங்க அமைச்சரான நானும் அதில் பங்கு பற்றுவேன்.
அந்தக் கூட்டத்தின்போது, கிழக்கு மாகாணத்திலுள்ள சகல ஆளணித் தேவைகளையும் ஆராய்ந்து அவற்றை நிரப்புவதற்கான சகல ஏற்பாடுகளையும் விரைவாக எடுக்கக் கூடியதாக இருக்கும்.
ஆளணிப் பற்றாக்குறை இந்த ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் மட்டுமல்ல. நான் சனிக்கிழமை தொடங்கி ஞாயிறு வரை கிழக்கு மாகாணத்திலுள்ள 25க்கும் மேற்பட்ட வைத்தியசாலைகளுக்கும் விஜயம் செய்து, அங்குள்ள தேவைகள் குறைநிறைகள் பற்றிக் கேட்டறிந்தேன்.
இச்சயமத்தில் சகல வைத்தியசாலைகளிலும் ஆளணிப் பற்றாக்குறை உள்ளதை நிருவாகத்தினர் எனக்குச் சுட்டிக் காட்டினார்கள்.
இதற்கு காரணம் சுமார் 25, 30 வருட காலமாக ஆளணித் தேவைகள் மீளாய்வு செய்யப்படாமல் இருந்து வந்துள்ளது.
இந்த புதிய அரசாங்கத்தின் கொள்கைகளில் ஒன்று ஆளணித் தேவைகளை மீளாய்வு செய்து பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதுதான்.
சுகாதாரத் துறையில் மட்டுமல்லாமல், சகல அரச துறைகளிலும் ஆளணித் தேவைகள் நீண்ட காலமாக மீளாய்வு செய்யப்படவில்லை.
தற்சமயம் ஆளணித் தேவைகள் மீளாய்வு செய்யப்படுவதன் மூலம் ஒரு இலட்சம் வேலை வாய்ப்புக்களை உருவாக்கலாம் என்று தற்போதைய அரசு கருதுகின்றது.
எதிர்வரும் தேர்தலுக்குப் பின்னர் அமைக்கப்படவிருக்கின்ற புதிய அரசாங்கத்தில் ஒரு இலட்சம் தொழில் வாய்ப்;புகளை புதிதாக வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago