2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வட்டார எல்லை தொடர்பான கருத்துக்கள் பொதுமக்களிடம் எதிர்பார்க்கப்படுகின்றன

Suganthini Ratnam   / 2015 மார்ச் 11 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், கே.எல்.ரி.யுதாஜித்

உள்ளூராட்சி நிறுவனங்களின் வட்டார எல்லை நிர்ணயம் செய்யும் தேசியக்குழுவினால் தயாரிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்துக்குரிய இறுதி நகல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை தொடர்பான கருத்துக்களை பொதுமக்கள் வழங்குவதற்கான அறிவிப்பு மாவட்ட செயலகத்தினால் விடுக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பான கருத்துக்களை எதிர்வரும் 15ஆம் திகதிவரை வழங்கமுடியும். அத்திகதிக்கு பின்னர் வழங்கப்படும் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.

அரசாங்க நிர்வாக, மாகாணசபைகள், உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி அமைச்சின் செயலாளரினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள இந்நகலை மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரின் அலுவலகத்தில் பார்வையிடமுடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X