2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நிலத்துக்கடியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மீட்பு

Suganthini Ratnam   / 2015 மார்ச் 11 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி ஐந்தாம் குறிச்சிப் பகுதியில் கட்டடமொன்று நிர்மாணிப்பதற்காக அத்திபாரம் வெட்டிக்கொண்டிருந்தபோது, நிலத்துக்கு அடியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த  நிலையில் துப்பாக்கியொன்று  புதன்கிழமை (11) மீட்கப்பட்டுள்ளது. இந்தத் துப்பாக்கி ரி -81 வகையைச் சேர்ந்தது  என்று  காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி பகுதியில், காத்தான்குடி சுகாதார அலுவலகத்தின் கீழ் தாய்சேய் நிலையக் கட்டடம் நிர்மாணிப்பதற்காக அத்திபாரம் வெட்டிக்கொண்டிருந்தபோது, அந்த அத்திபாரக் கிடங்கில் குழாய் ஒன்றினுள் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் இந்தத் துப்பாக்கியை  மேசன்மார் கண்டுள்ளனர்.

இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்துக்கு மேசன்மார் தகவல் வழங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து   காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.வெதகெதர தலைமையில் அங்கு சென்ற  பொலிஸார்,  துப்பாக்கியை மீட்டு, பொலிஸ் நிலையத்துக்கு  கொண்டுசென்றுள்ளனர்.

இது தொடர்பான  விசாரணைகளை  மேற்கொண்டுவருவதாகவும் பொலிஸார்  தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X