Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Sudharshini / 2015 மார்ச் 11 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
அரசாங்கத்தின் நூறு நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ், தேசிய அனர்த்த ஒத்திகை நிகழ்வு நாடளாவிய ரீதியில் கரையோர மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ அமைச்சுடன் அனர்த்த முகாமைத்துவ நிலையமும் பாதுகாப்பு தரப்பினரும் இணைந்து இந்நிகழ்வினை நடத்துகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான தேசிய நிகழ்வு கோட்டைக்கல்லாறில் இன்று புதன்கிழமை (11) அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில், அனர்த்தகள் ஏற்படும் போதும் எவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இந்த ஒத்திகை நிகழ்வில் பெருமளவான பொதுமக்கள் பங்குகொண்டு ஒத்துழைப்பு வழங்கினர்.
மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஒத்திகை நிகழ்வில், படை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், கிராம சேவையாளர்கள், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் செல்வி வி.ஜனனி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .