Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2015 மார்ச் 12 , மு.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித், எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா
முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிரான முறைப்பாடுகள் இலஞ்ச ஊழல் மோசடிகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் புதன்கிழமை(11) சமர்பிக்கப்பட்டன.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) சிரேஷ்ட உறுப்பினரும் காத்தான்குடி நகரசபையின் முன்னாள் எதிர்கட்சி தலைவருமாகிய ஏ.எல்.எம்.சபீல் புதன்கிழமை(11) கொழும்பில் வைத்து இதனை சமர்பித்தார்.
முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினாலும் அவரது சகாக்களினாலும் மேற்கொள்ளப்பட்ட நிதி மோசடிகள், ஊழல்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்கள் தொடர்பாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மிக நீண்ட காலமாகவே குரல் கொடுத்து வருகிறது.
காத்தான்குடி நகரசபையில் பிரதான எதிர்கட்சியாக அங்கம் வகிக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அங்கு நடைபெறும் பல்வேறு மோசடிகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பாக நகரசபைக்குள்ளேயும் அதற்கு வெளியிலும் தொடர்ந்தும் குரல்கொடுத்து வந்தது.
மேற்படி அமைப்பானது, பல்வேறு மோசடிகளை ஆதார பூர்வமாக முன்வைத்த போதிலும் அவற்றைத் திருத்திக் கொள்வதற்கோ அல்லது கட்டுப்படுத்துவதற்கோ முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் பூரண கட்டுப்பாட்டில் இயங்கும் காத்தான்குடி நகரசபை ஒரு போதும் முன்வரவில்லை.
அதுபோன்றே காத்தான்குடி நகரசபைக்கு வெளியில் ஹிஸ்புல்லாஹ்வினால் அமுல்படுத்தப்பட்ட திட்டங்கள் பலவற்றில் நிகழ்ந்த பாரிய மோசடிக்கள் தொடர்பாகவும் இவ் அமைப்பு பல்வேறு தரப்பினருக்கும் சுட்டிக்காட்டி வந்தது. அவை தொடர்பிலும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் ஆட்சிமாற்றத்தை தொடர்ந்து, கடந்த காலங்களில் நடைபெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் காத்தான்குடியில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி நடாத்திய ஊடக சந்திப்பின்போது, ஒரு விசேட உள்ளூர் பொறிமுறை ஒன்றின் மூலம் ஹிஸ்புல்லாஹ் தொடர்பிலான ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களை விசாரிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தது.
இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கென கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவிடம் இவர் தொடர்பிலான முறைப்பாடுகள் கையளிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது. அந்த வகையிலேயே ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிரான முறைப்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இம்முறைப்பாடுகள் தொடர்பிலான மேலதிக விபரங்களையும் சாட்சியங்களையும் ஆணைக்குழுவுக்கு வழங்குவதற்கும் தாம் தயாராக இருப்பதாகவும் இது தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் நல்லாட்சிக்கான தேசிய ஆணைக்குழுவிடம் கோரியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .