Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 12 , மு.ப. 08:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
–வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பிராந்திய சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, மனித பாவனைக்கு உதவாத உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பிரதேச பொதுச் சுகாதார மேற்பார்வை பரிசோதகர் கே.திருச்செல்வம் தெரிவித்தார்.
இதன்போது, சுமார் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான பிஸ்க்கட்டுக்கள், குடிநீர் போத்தல்கள், பெருமளவான உணவுப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்ட 6 கடை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
களுவாஞ்சிக்குடி பிரதேச பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.கிருஷ்ணகுமாரின் வழிகாட்டலில் பொதுச் சுகாதார மேற்பார்வை பரிசோதகர் கே.திருச்செல்வம் தலைமையிலான குழுவினர், களுவாஞ்சிக்குடி பொதுச்சந்தையை அண்டிய பகுதியிலும் களுவாஞ்சிக்குடி நகரிலும் இச்சோதனையை மேற்கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .