Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 12 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு நகரிலுள்ள பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் ஊழியர்கள் வியாழக்கிழமை (12) காலை பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு நகரிலுள்ள அலுவலகம் மற்றும் கடைத்தொகுதிகளை மூடி பணிப்பகிஷ்;கரிப்பு போராட்டத்தில் இவர்கள் ஈடுபட்டனர்.
பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கட்டடதொகுதியினுள் புதன்கிழமை (11) நுழைந்த அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றின் தலைவர் ஒருவர், கடமையிலிருந்த முகாமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது தகாதவார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டார் என்று இந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.
அத்துடன், பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் வர்த்தக நிலைய தொகுதிக்குள் குறித்த அரசசார்பற்ற நிறுவனத்தின் தலைவி முறையற்ற வகையில் வர்த்தக நிலையங்களை பெற்றுள்ளதுடன், இரண்டு வருடங்களாக அதற்கான வாடகை செலுத்தவில்லை. இது தொடர்பில் முறையான விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.
இது தொடர்பில் கிழக்கு மாகாண விவசாய, கூட்டுறவு அமைச்சர் கி.துரைராஜசிங்கத்தின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டதை தொடர்ந்து, அவரின் பணிப்பின் பேரில் அங்கு சென்ற கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில்; ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார்.
இது தொடர்பில் உரிய விசாரணை முன்னெடுக்கப்படும் அமைச்சர் வழங்கிய உறுதிமொழியை அடுத்து பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .