Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 13 , மு.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
'கடந்தகாலத்தில் நாங்கள் பலவற்றை இழந்தாலும், எதிர்காலத்தில் எமது மக்களின் உரிமைகளுடன் சேர்த்து பொருளாதார, வாழ்வாதார ரீதியான விடயங்களுக்கு நாம் போராடவேண்டியுள்;ளோம்' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசன்ன இந்திரகுமார் தெரிவித்தார்.
எருவில் கண்ணகி மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இங்கு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது வைத்திருந்த நம்பிக்கை காரணமாக எமது மக்கள் தங்களின் வாக்குகளை செலுத்தியமையால், ஏற்பட்ட மாற்றத்தினூடாக இவ்வாறான பல செயற்பாடுகள் எமது மாவட்டத்தில் மட்டுமல்லாது, நாடு பூராகவும் இடம்பெறுகின்றன. இதற்கு எமது மக்களுக்கே முதற்கண் நன்றி தெரிவிக்கவேண்டும்.
கடந்தகாலத்தில் பல இன்னல்கள், புறக்கணிப்புகளை நாம் சந்தித்தோம். ஆனால், எக்காலத்திலும் எமது கல்வியை நாம் விட்டுக்கொடுக்கவில்லை. எமது மாணவர்கள் கல்வியில் மேன்மேலும் முன்னேறவேண்டும் என்பதே எம் அனைவரினதும் குறிக்கோள். எமது சமூகம் கல்வித்தரத்தில் உயரவேண்டும். முன்பு கல்வி நிலையில் உயர்ந்திருந்த நாம், கடந்தகால அசாதாரண சூழ்நிலையால் தெரிந்தோ, தெரியாமலோ இவ்வாறான நிலைக்கு சென்றுவிட்டோம்.
கடந்தகாலத்தில் பல புறக்கணிப்புகள் இருந்தாலும், அவை குறைவடைந்துள்ளனவே தவிர மாற்றப்படவில்லை. மாற்றம் சிறிது, சிறிதாக மேற்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை எம் அனைவர் மத்தியிலும் இருக்கின்றது.
எமது சமூகம் எதிர்காலத்தில் கல்வியூடாக எமது உரிமைக்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ளவேண்டிய சூழல் உருவாக்கப்பட்டுவருகின்றது. ஒரு சமூகம் கல்வி இல்லாத நிலைக்கு செல்லும்போதே, அதன் உரிமைகள் தொடர்பான அறிவுத்தன்மை இழக்கப்பட்டு எமது வரலாறுகளும் மாற்றப்படுகின்றன' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .