2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பெண்கள் தலைமைத்துவ குடும்பங்களுக்கு நிதியுதவி

Gavitha   / 2015 மார்ச் 14 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்

பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு சுயதொழில் ஊக்குவிப்பு  பணம் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (13) மட்டக்களப்பு டேபா மண்டபத்தில் நடைபெற்றது.

வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள சமூர்த்தி பயனாளிகளுக்கு, குறித்த ஊக்குவிப்புப் பணம் வழங்கி வைக்கப்பட்டது.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி. தவராஜாவினால் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடு, 18 பெண்களுக்கு தலா ரூபாய் 10,000 வீதம் மொத்தமாக ரூபாய் 180,000 வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு, உதவிப் பிரதேச செயலாளர் மற்றும் அரச சார்பற்ற நிறுவன உத்தியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X