2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சில இடமாற்றங்களினால் கல்வி நடவடிக்கைகளில் பாதிப்பு

Suganthini Ratnam   / 2015 மார்ச் 15 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் சில இடமாற்ற நடவடிக்கைகளினால் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாகவும் இது தொடர்பில் உரிய கவனம் செலுத்தவேண்டும் எனவும் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி அதிபர் எஸ்.அருட்பிரகாசம் தெரிவித்தார்.

தமது பாடசாலைக்கு தேவையான ஆசிரியர்களை விண்ணப்பித்து பெறும்போது, அவற்றை கிழக்கு மாகாண கல்வித்திணைக்களம் வேறு பாடசாலைக்கு மாற்றுவதாகவும் அவர்  கூறினார்.

மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா, பாடசாலையின் நல்லையா மண்டபத்தில் நேற்று  சனிக்கிழமை  நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் எஸ்.அருட்பிரகாசம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழத்தின் சிரேஷ்;ட விரிவுரையாளர் எஸ்.சுதர்சனும் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரனும் மண்முனை வடக்கு கோட்டக்கல்வி அதிகாரி ஏ.சுகுமாரனும்  கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X