Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2015 மார்ச் 16 , மு.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.பாக்கியநாதன்
மட்டக்களப்பைச் சேர்ந்த உபாலி சில்வா என்பவரினா, இந்து அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை (15), ஒரு தொகுதி பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட இந்துக் குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், சின்ன ஊறணி ஸ்ரீ மாவடிப் பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வின் போதே இந்த உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.
மாணவர்களிடையே அறநெறியை வளர்த்து நாட்டுக்கான சிறந்த ஆழுமை மிக்க பிரஜையை உருவாக்கும் இப்பணிக்கு உதவிய சகோதர மொழியை பேசும் உபாலி சிவ்வாவுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ த.சிவகுமாரன் குருக்கள் தெரிவித்தார்.
ஊறணி பத்திரகாளியம்மன் ஆலயம் மற்றும் காந்தி கிராமம் சிவன் கோயில் மற்றும் மாவடிப்பிள்ளையார் ஆலயங்களில் அறநெறிக் கல்வி கற்றுவரும் 250 மாணவர்களுக்கே இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், ஆலய நிர்வாகத்தினர், அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் ஒன்றிய நிர்வாகத்தினர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .