2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு

Gavitha   / 2015 மார்ச் 16 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்

இந்து சமய பொது அறிவுப்போட்டி பரீட்சையில் சித்தி பெற்ற அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு  ஞாயிற்றுக்கிழமை (15) கோட்டைமுனை விஸ்வகர்ம மண்டபத்தில் நடைபெற்றது.

சிறுவர்களுக்கு அறநெறியைக் கற்பித்து அவர்களின் இந்து சமய அறிவைப் பரீட்சிக்கும் நோக்கில், கடந்த வருடம் - 2014இல் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட பொது அறிவுப்போட்டிப் பரீட்சையில், 120 மாணவர்கள் சித்திபெற்றுள்ளனர் என அதன் பொறுப்பாசிரியர் தெரிவித்தார்.

கோட்டைமுனை மஹா மாரியம்மன் ஆலய அறங்காவலர் சபையின் செயலாளர் எஸ். சிவலிங்கம், கற்பித்த ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.

இதன்போது மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள், ஆலய அறங்காவலர் சபையினரால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X