2025 மே 19, திங்கட்கிழமை

விபத்தில் மூவர் காயம்

Suganthini Ratnam   / 2015 மார்ச் 16 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கதிரவெளியில் திங்கட்கிழமை (16)  இடம்பெற்ற  விபத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயமடைந்துள்ளதாக  வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தல் வெருகல் - கல்லடி கிராமத்தைச் சேர்ந்த எஸ்.தனபாலசிங்கம் (வயது 34),  அவரது மனைவி சிறிபிரியா (வயது 30)  மற்றும் ஏழு மாதக் குழந்தையான கனுசிகா ஆகியோரே காயமடைந்துள்ளனர்.

ஏறாவூர் - களுவன்கேணியிலுள்ள மரண வீடொன்றுக்குச் சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில்  வீடு திரும்பிக்கொண்டிருந்த இவர்கள் மீது,  கதிரவெளியின் பிரதான வீதியில்  சிறிய ரக வாகனமொன்று மோதியுள்ளது.  இவர்களின்  மோட்டார் சைக்கிளை மேற்படி  வாகனம் முந்திச் செல்ல முற்பட்டபோது இந்த  விபத்து சம்பவித்துள்ளது.

இந்த விபத்தின்போது கைக்குழந்தை நீண்ட தூரத்துக்கு  வீசப்பட்டுக் கிடந்துள்ளது.

இந்த விபத்தில் கணவனும் மனைவியும்; மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், குழந்தை சிகிச்சை பெற்றுக்கொண்டு வீடு திரும்பியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.    

வாகன சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X