2025 மே 19, திங்கட்கிழமை

சிறுதொழில் முயற்சியாளர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு

Princiya Dixci   / 2015 மார்ச் 16 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

சிறுதொழில் முயற்சியாளர்களை இனங்கண்டு அவர்களுடைய தொழில் ஆர்வத்தை அடையாளப்படுத்தி, எதிர்காலத் திட்டங்களுக்கு சிறந்த தொழில் முயற்சியாளர்களை தெரிவுசெய்யும் விழிப்புணர்வுக்கருத்தரங்கு கோரளைப்பற்று மத்தி, பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள செம்மனோடையில் இன்று திங்கட்கிழமை (16) நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட முயற்சியாண்மை அபிவிருத்தி பயிற்சி உத்தியோகஸ்தர் சி.வினோத் அவர்களின் தலைமையின் கீழ் இந்த விழிப்புணர்வுக்கருத்தரங்கு நடைபெற்றது.

இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இயங்கும் மட்டக்களப்பு மாவட்ட சிறுவியாபார அபிவிருத்தி பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட இந்த  விழிப்புணர்வுக்கருத்தரங்கில், கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் அபிவிருத்தி உத்தியோகஸ்தர், திறன் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் மற்றும் கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் பங்கேற்றனர்.


வளமான அபிவிருத்திக்கு முயற்சியாண்மை மற்றும் சிறுவியாபார துறையினரின் பங்களிப்பை ஏற்படுத்தல், தேசத்தின் பொருளாதார அபிவிருத்திக்காக செயற்திறன் கொண்ட பிரிவுகளில் தொழில்களை அபிவிருத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு சிறுவியாபார அபிவிருத்தி பிரிவு செயற்பட்டு வருகிறது.

அதேபோன்று, தொழில் வழிகாட்டல் பயிற்சி நெறி, தொழில்நுட்ப பயிற்சி, தொழில் வழிகாட்டல் ஆலோசனை, முகாமைத்துவ பயிற்சி திட்டம், வியாபார மனோபாவ ஊக்குவிப்பு, முயற்சியாண்மை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம், மாவட்ட முயற்சியாண்மை சங்கங்கள் அமைத்தல் மற்றும் மாவட்ட, தேசிய கண்காட்சிகள் நடத்துதல் போன்றவற்றையும் சிறுவியாபார அபிவிருத்தி பிரிவு நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X