2025 மே 19, திங்கட்கிழமை

வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2015 மார்ச் 16 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்,ஆர்.ஜெயஸ்ரீராம்

கடந்த நான்கு மாதகாலமாக வழங்கப்படாமல் நிலுவையாகவுள்ள சம்பளத்தை வழங்குமாறு கோரி வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்கள்  கவனயீர்ப்புப் போராட்டத்தில் திங்கட்கிழமை (16) ஈடுபட்டனர்.

கடதாசி ஆலையிலிருந்து ஊர்வலமாக சென்ற  வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்கள், ஓட்டமாவடி பாலத்துக்கு முன்பாகவே  கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்கு மாகாணத்தில்  பெரிய தொழிற்சாலையாக   வாழைச்சேனை கடதாசி ஆலை இயங்கிவந்தது. இங்கு  மூவாயிரத்துக்கும்  அதிகமானோர் கடமையாற்றியபோதிலும்,  தற்போது 142 பேர் மாத்திரமே கடமையாற்றுகின்றனர்.

இந்த 142 பேருக்கும் கடந்த நான்கு மாதகாலமாக சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையாக உள்ளது. சம்பளத்தை உரிய அதிகாரிகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரியே இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்ததாக கவனயீர்ப்புப் போராட்டத்தில்  ஈடுபட்டவர்கள் கோரியுள்ளனர்.

இதன்போது, மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியை மறித்து வாகனங்களை செல்லவிடாமல்  இவர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால், வாகனங்கள் செல்லாது சுமார் முப்பது நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்ற இடத்துக்கு வந்த பொலிஸார், கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன்  கலந்துரையாடினர்.  இதன் பின்னர், வாகனங்கள் செல்வதற்கு வழிவிடப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X