2025 மே 19, திங்கட்கிழமை

உலக நாச்சியின் சிலை இனந்தெரியாதோரால் உடைப்பு

Suganthini Ratnam   / 2015 மார்ச் 16 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்,வடிவேல் சக்திவேல் 

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் ஆரையம்பதியில் வைக்கப்பட்டிருந்த கிழக்கில் முதலாவது  பெண் சிற்றரசியான உலக நாச்சியின் சிலை இனந்தெரியாதோரினால் உடைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் திங்கட்கிழமை (16) காத்தான்குடி  பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக  கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

இந்தச் சிலையின் கை, வாள் என்பன ஞாயிற்றுக்கிழமை (15) இரவு உடைக்கப்பட்டுள்ளன.

ஆற்றல் பேரவை மற்றும் ஊர் மக்களின் உதவியுடன்   இந்த சிலை  நிர்மாணிக்கப்பட்டு கடந்த 2014.09.15 அன்று திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X