2025 மே 19, திங்கட்கிழமை

புதிய மாணவர்களுக்கு வரவேற்பு

Kogilavani   / 2015 மார்ச் 17 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன், எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, கோவில்குளம் தேசிய உயர் தொழில்நுட்பக் கல்லூரி நிறுவகத்தில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு திங்கட்கிழமை (16) நடைபெற்றது.

நிறுவனத்தின் இணைப்பாளர் எஸ்.ஜெயபாலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்களுக்கு உயர் தொழில்நுட்பக் கல்வியை வழங்கும் நோக்கோடு இக்கல்வி நிறுவனம் இயங்கி வருகின்றது.

உயர்கல்வி அமைச்சின் கீழ் செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தில் இரு வருட கற்கை நெறிகளைக் கொண்ட உயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறி காணப்படுகின்றது. இக்கற்கை நெறிக்கு இவ்வருடம் 319 மாணவர்கள் இணைக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் இணைப்பாளர் தெரிவித்தார்.

உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா கற்கை நெறிக்காக முழு நேர மாணவர்கள் 105 பேரும் பகுதி நேர மாணவர்கள்   50 பேரும் உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா பாட நெறிக்காக 80 முழு நேர மாணவர்களும் 84 பகுதி நேர மாணவர்களும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

விரைவில் உயர் தேசிய தகவல் தொழில்நுட்ப டிப்ளோமா ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X