Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Sudharshini / 2015 மார்ச் 15 , மு.ப. 06:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
அநுராதபுரம் சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு சித்தாண்டியைச்சேர்ந்த உதயசிறிக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கிழக்கு மாகாண இந்து ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் கதிர் பாரதிதாசன் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை, பொதுமன்னிப்பு வழங்கும் வரையிலும் அவரை அநுராதபுரம் சிறையிலிருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றுமாறும் அவர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சிகிரியாவிலுள்ள ஓவியத்தில் தனது பெயரை எழுதிய குற்றத்துக்காக மட்டக்களப்பு சித்தாண்டியைச் சேர்ந்த உதயசிறி எனும் யுவதி அநுராதபுரம் சிறையில் சிறை வைக்கப்பட்டுள்ளார். வயோதிபம், பணவசதி இல்லாமை, சிங்கள மொழி தெரியாமை போன்ற காரணங்களினால் அவரை பார்ப்பதற்கு இயலாத நிலையில் அவரது தாய் இருக்கின்றார்.
மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அவரை மாற்றினால் அவரது தாய் மற்றும் உறவினர்கள் பார்ப்பதற்கு இலகுவாக இருக்கும். மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அவரை மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
அவர், அறியாமல் இந்தப்பிழையை செய்து விட்டார். அதில் எழுதுவது குற்றமென அவர் அறிந்திருக்கவில்லை. இது அவர் தெரிந்து செய்த திட்டமிட்ட செயலாக கருதமுடியாது.அவருக்கு வழங்கப்பட்டுள்ள சிறைத்தண்டனை, அவரின் எதிர்கால வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கிவிடும்.
இந்த யுவதியின் உழைப்பிலேயே அவரது தாயார் மற்றும் குடும்பம் தங்கி வாழ்கின்றது. இவற்றையெல்லாம் கருத்திற் கொண்டு அவருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .