2025 மே 19, திங்கட்கிழமை

சிகிரியா ஓவியத்தில் பெயர் எழுதிய யுவதிக்கு பொதுமன்னிப்பு அளிக்கக் கோரி பேரணி

Suganthini Ratnam   / 2015 மார்ச் 17 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்,எஸ்.பாக்கியநாதன்

சிகிரியா ஓவியத்தில் தனது பெயரை எழுதி சிறைவாசம் அனுபவிக்கும் பெண்ணுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் என்பது உட்பட   பல கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (17) பேரணி  நடைபெற்றது.

மேன்மைப்படுத்தும் இணையம் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் பேரணி, மட்டக்களப்பு புகையிரத நிலைய வீதியில் ஆரம்பமாகி  மாவட்ட செயலகம்வரை சென்றது.

இதன் பின்னர், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம்  மகஜர் கையளிக்கப்பட்டது.
 

'புதிய அரசே ஏழைப் பெண்களின் வாழ்வாதாரத்தை  உயர்த்த திட்டம் செய்', 'அவலமுறும் எம் பெண் சமூகததுக்கு விடிவு எப்போது', 'பெண்கள் சுய தொழிலில் ஈடுபட  உதவிக்கரம் நீட்டுங்கள்' உள்ளிட்ட சுலோகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை பேரணியில் கலந்துகொண்டோர் தாங்கியிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X