2025 மே 19, திங்கட்கிழமை

குடும்பங்களை தலைமை தாங்கும் பெண்களுக்கு பரிசுகள்

Suganthini Ratnam   / 2015 மார்ச் 17 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

குடும்பங்களை தலைமை தாங்கும் பெண்கள் வாழ்வாதார உதவிகளை பெற்று பொருளாதாரத்தில் முன்னேற்றம் பெற்றவர்களுக்கான ஊக்குவிப்புப் பரிசுகள் வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (17) மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கையின் சனத்தொகையில் 52 சதவீதம் பெண்கள் உள்ள நிலையில் அரசியல், உயர் பதவி, கல்வி போன்ற முக்கிய துறைகளில் பெண்களின் பங்களிப்பானது  2012ஆம் 2013ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது,  2014ஆம் ஆண்டு  அதிகளவில் உள்ளன என்று  மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட  இணைப்பாளர் ஏ.சி.ஏ.அசீஸ் தெரிவித்தார்.

பெண்களின் உரிமைகளை மதிப்பதோடு,  உரிய இடத்தை வழங்கும் நாடுகளுள் இலங்கையும் காணப்படுவது இலங்கைப் பெண்களுக்குரிய வரப்பிரசாதமாகும் என்றும் அவர்  தெரிவித்தார்.

தேவைகள் நாடும் மகளிர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், அமைப்பின் பயனாளிகளான 60 பேருக்கு பரிசுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X