Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Gavitha / 2015 மார்ச் 17 , பி.ப. 01:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
சவுதி அரேபியா ரியாதிலுள்ள அல் இமாம் சுவுத் பல்கலைக்கழகத்தின் தொலைக்கல்வி நிறுவனம் கிழக்காசியாவுக்கான கிளையை, மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிகழ்வு திங்கட்கிழமை (16) காத்தான்குடி அல்மனா அறிவியற் கல்லூரியிலுள்ள அல் ராஸித் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது, மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியின் ஆளுனரும் சபைத்தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், சவுதி அரேபியா ரியாதிலுள்ள அல் இமாம் சுவுத் பல்கலைக்கழகத்தின் தொலைக்கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி அஸ்ஸெய்ஹ் அகமத் அல்சுதைஸ் ஆகிய இருவரும் இது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
இந்த வைபவத்தில் சவுதி அரேபியாவின் சர்வதேச மனித வள அபிவிருத்தி நிலையத்தின் கிழக்காசிய பிராந்தியத்துக்கான பொறுப்பதிகாரி அஸ்ஸெய்ஹ் காலித் அத்தாவூத் மற்றும் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் உப தலைவர் எஸ்.ஆதம்பாவா மதனீ, தென்கிழக்கு பல்கலைக்கழக அறபுத்துறை பீடாதிபதி மௌலவி ஏ.எம்.அலியார் றியாழி மற்றும் அல்மனார் அறிவியற் கல்லூரியின் செயலாளர் ஏ.எல்.மும்தாஸ் மதனீ உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியில் இந்த தொலைக்கல்வி நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இதில் பல்வேறு பட்டப்படிப்புக்கள் இடம் பெறவுள்ளதாகவும் இதை உலமாக்கள் அறபுக்கல்லூரி மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளமுடியுமெனவும் மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியின் ஆளுனர் சபைத்தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago