Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 18 , மு.ப. 07:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
பெண்கள் மற்றும் கர்;ப்பிணிகள் பேருந்துகளில் முகங்கொடுக்கும் அசௌகரியங்களை தடுக்க நடவடிக்கை எடுப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையம் மகஜர் கையளித்துள்ளதாக இணையத்தின் செயலாளர் ரமேஸ் ஆனந்தன் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை (17) இந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'கடந்த காலத்தில் யுத்தம், சுனாமி என பல இடர்களை சந்தித்த மட்டக்களப்பு மாவட்டம், இன்று அதிலிருந்து மீண்டுவருகின்ற மாவட்டமாக உள்ளது. எது எவ்வாறாயினும், எமது சமூகத்தின் முக்கிய பங்காளிகளான பெண்களின் முன்னேற்றம், பங்களிப்பு பற்றி சிந்திக்கின்ற, உதவிக்கரம் நீட்டுகின்றவர்கள் மிக குறைவாகவே உள்ளனர். இதிலும், குடும்பங்களை தலைமை தாங்கும் பெண்களின் நிலைமை பலமடங்கு பாதிக்கப்படுவதாகவே உள்ளது.
எமது மாவட்டத்தை பொறுத்தமட்டில் வறுமையில் முதலிடம், மதுபாவனையில் முதலிடம் என நாம் பெற்றுள்;ளோம். ஆனால், மக்களுக்காக சேவையாற்றக்கூடிய பல அரச, அரசசாரா அமைப்புக்கள் இருந்தும் இந்நிலை நீடித்துச்செல்வது பலதரப்பட்ட கேள்விகளை எழச்செய்கின்றது
பல கோணங்களில் அலசிப்பார்க்கும்போது, சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களுக்கும் இலகுவில் பாதிப்படையக்கூடியவர்களுக்கும் இருக்கின்ற ஒரே பலம், அவர்கள் ஒன்றிணைந்து நிறுவனமயமாகி செயற்படுவதேயாகும்.
கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பொதுவான பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு கோருகின்றோம்.
1.பாதுகாப்பான நுண்கடன் பெறாமையால் பெண்கள் உள, சமூக ரீதிகளாக பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
2.சிகிரியாவில் காணப்படும் பளிங்கு சுவரில் எழுதினார் என குற்றஞ்சாட்டப்பட்டு சிறைத்தண்டனை பெற்றுள்ள சித்தாண்டியை சேர்ந்த உதயசிறிக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு வலியுறுத்தல்.
3.பெண்கள் மற்றும் விசேடமாக கர்ப்பிணிகள்; பேருந்துகளில் முகங்கொடுக்கும் அசௌகரியங்களை தடுக்க நடவடிக்கை எடுத்தல்.
4.பெண் தொழில் முயற்சியாளர்களுக்காக நெக்டப் மற்றும் மாவட்ட செயலகமும் இணைந்து அமைத்துக்கொடுத்த கடைத்தொகுதியை, பெண்கள் பயன்படுத்தும்போது ப.நோ.கூ.சங்க நிர்வாகத்தினால் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதை நிறுத்தல்.
5.சட்டவிரோதமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று பாலியல், துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும்; பெண்களின் நிலைமை தவிர்க்கப்படவேண்டும். குறிப்பாக, தாய்மார்கள் இந்நிலைகளுக்கு உட்படுவதால், அவர்களால் பிள்ளைகள் மட்டுமன்றி முழுக்குடும்பமுமே பாதிப்புக்குள்ளாகிறது. இத்தகைய வெளிநாட்டு பயணங்களை தடுக்க முறையான அரசமட்ட பொறிமுறைகள் வகுக்கப்படுவதுடன், பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பான தரவுகள் தொகுக்கப்பட்டு, அவர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படவேண்டும்.
6.அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் தொடர்பான பாலியல் துன்புறுத்தல்கள், திருமண மோசடிகள் அதிகரித்துவருகின்றன. இவ்விடயங்கள் தொடர்பில் விழிப்பூட்டல்கள், அறிவூட்டல்கள் ஒழுங்குபடுத்தலுடன் செய்யப்படுவதுடன், இறுக்கமான கண்காணிப்பு நடைமுறைப்படுத்தல்களும் விசேடமாக உள்ளூர் கிராம அமைப்புகள் அதாவது இளைஞர் கழகங்கள், அறநெறிப் பாடசாலைகள், கிராம அபிவிருத்தி மற்றும் மகளிர் அமைப்புகள் பல இடங்களில் செயற்படாதிருப்பதுடன், அமைக்கப்படாதிருப்பதும் இளைஞர், யுவதிகளின் ஆரோக்கியமான மனநிலை மாற்றத்துக்கு தடையாக இருக்கிறது. இவ்விடயங்கள் தொடர்பாக தொண்டு அமைப்புகளின் ஒருங்கணைப்புகளும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டியதாகிறது. யுத்தத்தின் காரணமாக கணவனை இழந்த, காணாமல் போன பெண்களின் வாழ்வாhரம் அல்லது வாழ்க்கை இன்னும் சீரமைக்கப்படாதிருக்கிறது. இது குறித்த பெண்களின் அல்லது குடும்பங்களின் தனிப்பட்ட எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. பிள்ளைகளின் கல்வி இடைநிறுத்தப்படுகிறது.
7இன்னொரு விளைவாக சில பெண்கள் பாலியலை தொழிலாக கொள்ளவும் சமூக, கலாசார முரண்பாட்டு சிக்கலை ஏற்படுத்தவும் வழிசமைக்க அவர்களின் இந்நிலைமை முடிவுக்குகொண்டுவர அரசு குறித்த பாதிக்கப்பட்ட பெண்களுக்கான விசேட செயற்றிட்டத்தை உடன் அமுல்படுத்தவது காலத்தின் தேவையாகவுள்ளது.
எமது பல அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பல்வேறுபட்ட நுண்கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். இருப்பினும், இதில் ஏழைப்பாமர மக்களே மிகவும் பாதிக்கப்படுகின்றனர். மக்கள் விழிப்புணர்வூட்டப்படுவது முக்கியமாகும். மேலும், அக்கடனைப் பெற்று செய்யவேண்டிய சுயதொழிலாக இருக்கட்;டும். இது பற்றி அவர்கள் அறிவூட்டப்படவேண்டிய தேவையும் இங்குள்ளது.
கடந்த 2015.02.14 அன்று சிகிரியாவுக்கு சுற்றுலாசென்ற சின்னத்தம்பி உதயசிறி வயது 27 எனும் சித்தாண்டியை சேர்ந்த இவர் அங்குள்ள கண்ணாடி பளிங்கு சுவரில் எழுதினார் என்கின்ற குற்றத்துக்காக 2 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பெற்று தற்பொழுது அநுராதபுர சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றார். மிகவும் வறிய குடும்பத்தினைச் சேர்ந்த இப்பெண்ணுக்கு 2 மாதங்களில் திருமணம் இடம்பெறவும் திட்டமிடப்பட்ட நிலையில் வாழ்க்கை மற்றும் குடும்ப நிலைகருதி அவரை பொதுமன்னிப்பில் விடுதலை செய்யவேண்டுமென்பதே பலரது எதிர்பார்ப்புக்களுமாகும்.
பெண்கள் குழந்தைகளுடனும் பயணிக்கும்போதும் மற்றும் விசேடமாக கர்ப்பிணகளுக்கு ஆசனம் ஒதுக்கப்பட்டிருப்பது போதுமானது அல்ல. அதனை நான்கு அல்லது ஐந்து ஆசனங்களாக அதிகரிக்கப்படவேண்டும். அத்துடன் பேருந்துகளில் முழுமையாக ஏறிய பின்புதான் பேருந்தை நகர்த்த வேண்டும். இது போன்ற முகம்கொடுக்கும் அசௌகரியங்களை தடுக்க நடவடிக்கை எடுத்தல் அவசியமாகும்.
மட்டக்களப்பு மாவட்ட பெண் தொழில் முயற்சியாளர்களுக்கென அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு நெக்டப் திட்டத்தின் மூலம் மற்றும் மாவட்ட செயலகம் இணைந்து அமைத்துக்கொடுத்த கடைத்தொகுதியை பெண்கள் பயன்படுத்தும்போது ப.நோ.கூ.சங்கத்தின் நிர்வாகத்தினால் பல அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர் அதாவது, மேல் மாடியில் இருந்து கல் எறிதல், மண் தூவுதல், மின்சாரத்தை இடையூறு செய்தல் மற்றும் தண்ணீர் விநியோகத்தை தடைசெய்தல் போன்ற காரியங்களை மேற்கொண்டு வருகின்றன. இதனால், பெண் தொழில் முயற்சியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர் இவர்களுக்கான தீர்வை பெற்றுக்கொடுத்தல் அவசியமாகும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .