2025 மே 19, திங்கட்கிழமை

மகளிர் கௌரவிப்பு

Kogilavani   / 2015 மார்ச் 18 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு - ஏறாவூர்பற்று பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி மன்றமும் புல்லுமலை-கோப்பாவெளி சமுர்த்தி சங்கங்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த, சர்வதேச மகளிர் தின நிகழ்வு செவ்வாய்கிழமை(17) புல்லுமலை சந்தைக்கட்டடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஏறாவூர்பற்று பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எஸ்.ஜெயராஜ், கரடியனாறு சமுர்த்தி வங்கி முகாமையாளர் கே.திவாகர், ஏறாவூர்பற்று பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, புல்லுமலை-கோப்பாவெளி கிராமத்தில் சிறப்பாக சமூகத்துக்கு சேவையாற்றிய ஆறு மகளிர் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் 2014ஆம் ஆண்டு 5ஆம் தர புலமை பரீட்சையில் சித்தியடைந்த மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

இதேவேளை, மாற்றம் என்ற சஞ்சிகையும் இதன்போது வெளியிடப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X