2025 மே 19, திங்கட்கிழமை

இந்துமத அலுவல்கள் அமைச்சின் இணைப்புச் செயலாளராக சசிதரன்

Suganthini Ratnam   / 2015 மார்ச் 19 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் இணைப்புச் செயலாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மத்திய குழு தலைவருமான அரசரட்ணம் சசிதரன் நேற்று புதன்கிழமை  நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான இந்த நியமனம் மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் சுவாமிநாதனினால் வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி அரசரட்ணம் சசிதரன், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் நீண்டகால உறுப்பினரும் என்பதுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினராக கடந்த பத்து வருடங்களாக இருந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X