Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2015 மார்ச் 20 , மு.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.பாக்கியநாதன்
அரசின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையில் முதன் முதலாக ஒரே நாளில் மின்சாரம் வழங்கும் நடமாடும் சேவை வவுணதீவுப் பிரதேசத்தில்; நேற்று (19) நடத்தப்பட்டது.
வவுணதீவு பிரதேச செயலகத்தின் 24 கிராம சேவகர் பிரிவுகளுக்குமான மக்களின் நலன்கருதி புதிய விண்ணப்ப்படிவம் ஏற்றுக்கொள்ளுதல், புதிய விண்ணப்பத்திற்கு மின்சாரம் வழங்குதல், மின் பட்டியல் பிரச்சினைகள் ஆராய்தல், மின்சாரம் தொடர்பான பிரச்சினைகள் ஆராய்தல் மின் கட்டணம் செலுத்துதல் என்பன மேற்கொள்ளப்பட்டதாக மின் பொறியியலாளர் எஸ். அனிதா தெரிவித்தார்.
இன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை நடைபெற்ற இந்த சேவையில் சுமார் 150 பேரின் பிரச்சினைகள் ஆராயப்பட்டு தீர்வு காணப்படவுள்ளதாக பொறியியலாளர் மேலும் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண பிரதிப் பொது முகாமையாளர் ரி.தவனேஸ்வரன், பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், அபிவிருத்தி மற்றும் நிர்மாணப் பொறியியலாளர் டி.கௌதமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago