Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2015 மார்ச் 20 , மு.ப. 08:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய தொழில் தகமைச் சான்றுகளுக்கான (ண்ஏஞ - என்.வி.கியூ) 5,6ஆம் நிலைக் கற்கைகளை மேற்கொக்ளக்கூடிய பல்கலைக்கழக கல்லூரி, தொழில்நுட்பவியல் கல்லூரிகள் அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தொழில்நுட்பக் கல்வி வழங்குநர்களுக்கான ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் இன்று எடுக்கப்பட்டன.
நேற்றைய தினம் (19) பகல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 1 தொடக்கம், 4 வரையான தேசிய தொழில் தகமைச் சான்றுகளுக்கான கற்கைகள் இருக்கின்றன. இந்த 4 வரை கற்ற மாணவர்கள் 1,156பேர் மட்டக்களப்பில் தற்போதுள்ளனர்.
இருப்பினும் இவர்களுக்கான மேற் கற்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது. எனவே 5,6ஆம் நிலைக் கற்கைகளை மேற்கொக்ளக்கூடிய பல்கலைக்கழக கல்லூரி, தொழில்நுட்பவியல் கல்லூரிகள் அமைக்கப்பட வேண்டும். அதற்கு மாவட்ட அரசாங்க அதிபர் கவனமெடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், தொழில்நுட்பக் கல்வியைப் பயிலும் மாணவர்களுக்கு வழிகாட்டல் திறன் எனும் பாட அலகு இணைக்கபட வேண்டும். இதற்கான பாடத்திட்டமானது சிறுவர் பாதுகாப்பு நிறுவனத்தின் ஊடாக வை.எம்.சி.ஏ.யினால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனைப் பாடத்திட்டத்தில் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கையினையும் அரசாங்க அதிபர் மேற்கொள்ள வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழில் நுட்பக் கல்வியை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்டதே மாவட்ட தொழில் நுட்பக் கல்வி வழங்குனர்களுக்களை ஒருங்கிணைத்து செயற்படுத்துவதற்காகவே இந்த ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தப்படுகிறது.
இன்றைய கூட்டத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியின் பிரதி அதிபர் எஸ்.தியாகராஜா, பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .