Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2015 மார்ச் 20 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
தொற்று நோய்கள் ஏற்படாமல் இருப்பதற்கான கட்டுப்பாடுகள் சம்மந்தமாகவும் தொற்றா நோய்கள் வராமல் தடுப்பது சம்மந்தமாகவும் பாடசாலை ரீதியாக மாணவர்களை விழிப்பூட்டும் கருத்தரங்கொன்று வெள்ளிக்கிழமை (20) மட்.மண்டூர் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
வெல்லாவெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இக்கருத்தரங்கினை மண்டூர் பிரதேசத்துக்குப் பொறுப்பான பொதுச்சுகாதார பரிசோதகர் செ.விக்கினேஸ்வரராஜா, பழுகாமம் பிரதேசத்திற்குப் பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் சி.சிவசுதன் ஆகியோர்; இணைந்து நடத்தினர்.
இக்கருத்தரங்கின் போது மாணவர்கள், தொற்று நோய்க்கு எவ்வாறான சந்தர்ப்பங்களில் இலக்காகின்றனர் என்பது சம்மந்தமாகாவும் தொற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள், மற்றும் தொற்று நோய்களாக கொள்ளக்கூடிய நேய்கள் எவை போன்றன சம்மந்தமாக மிகவும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.
அதேபோல் தொற்றா நோய்களில் இருந்து எதிர்காலத்தில் எவ்வாறு மாணவர்கள் தப்பித்துக் கொள்வது சம்மந்தமாகவும் இதன்போது விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago