2025 மே 19, திங்கட்கிழமை

பிரதேச செயலகத்தின் முன்னால் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2015 மார்ச் 20 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல்-சக்திவேல்

காட்டு யானைகளிடமிருந்து தம்மை பாதுகாக்குமாறு கோரி, போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் முன்னால் பொதுமக்கள் இன்று வெள்ளிக்கிழமை(20) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் பிரதேச செயலகத்தின் முன் வாயிற் கதவை பிரதேச செயலாளர் உள்ளிட்ட உத்தியோகஸ்;தர்களை பிரதேச செயலகத்தினுள் செல்லவிடாது தடுத்ததுடன் பிரதேசத்திலுள்ள காட்டு யானைகளை உடன் வெளியேற்றுமாறு கோசமிட்டனர்.

போரதீவுப்பற்று பிரதேசத்திலுள்ள பாலையடிவட்டை, வைக்கியல்ல, நவகிரிநகர், 38 ஆம் கிராமம், நெல்லிக்காடு, விளாந்தோட்டம் போன்ற கிராமங்களிலிருந்து 100 இற்கு மேற்பட்ட இவ் ஆர்ப்பாட்டத்தில்  கலந்துகொண்டனர்.

இவ்விடத்துக்கு வருகை வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், பொன்.செல்வராசா, மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஞா.கிருஷ்ணபிள்ளை, மா.நடராச ஆகியோரும் மக்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதேச செயலாளர் உள்ளிட்ட உத்தியோகஸ்தர்கள் வாயிற் கதவைத்; திறந்து உள்ளே செல்ல முற்பட்ட வேளையில் பொதுமக்கள் அவர்களை விடாது தடுத்தனர்.

எமது கிராமத்தை அண்டியுள்ள பகுதிகளில் தற்போதும் நிலை கொண்டுள்ள காட்டுயானைகளை வெளியேற்ற நடவடிக்கை எடும்போம் என எழுத்து மூலம் அறியத்தரும் பட்சத்தில் நாம் இவ்விடத்திலிருந்;து கலைந்த செல்வோம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

பின்னர் மேற்படி இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதேச செயலாளர் மாத்திரம் பிரதேச செயலகத்தினுள் செல்ல பொதுமக்களால் அனுமதி வழங்கட்டு வாயிற் கதவு திறந்து விடப்பட்டது.

பிரதேச செயலகத்தினுள் சென்று பிரதேச செயலாளர் கடிதம் எழுதி மக்களிடம் கையளித்த பின்னரே ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்துசென்றனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர்,

'போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் முன்னால் பொதுமக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கிணங்க 2 வார காலத்திற்குள் காட்டு யானைகளை வன ஜீவராசிகள் திணைக்களத்தின் உதவியுடன் வெளியேற்ற நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளிக்கின்றேன்.

மேலும் இந்நடவடிக்கையை மேற்கொள்ள வன ஜீவராசிகள் திணைக்களம், இராணுவம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியுடன் நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளிக்கின்றேன்.

மேலும் இப்பிரதேசத்திலுள்ள குடிநீர்ப் பிரச்சனைக்கு இன்றிலிருந்து தற்காலிகமாக  போரதீவுப்பற்று பிரதேச சபையினூடாக வவுசர்கள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காட்டு யானைகளினால் ஏற்பட்ட சேதத்துக்கு 1 மாத காலத்திற்குள தீர்வு கிட்டும் என உறுதியளிக்கின்றேன்' உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில் இவ்விடத்துக்கு வந்த வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகஸ்தர்கள் தாம் இங்குள்ள காட்டு யானைகளை வெளியேற்ற உடன் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X