2025 மே 19, திங்கட்கிழமை

'சிறுபான்மைக் கட்சிகள் ஒன்றிணையும் காலம் கனிந்துள்ளது'

Suganthini Ratnam   / 2015 மார்ச் 24 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல்,வா.கிருஸ்ணா

மலையகத்திலுள்ள அரசியல் கட்சிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,  முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட  சிறுபான்மைக் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படக்கூடிய காலம் தற்போது கனிந்துள்ளதாக  கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதகிருஸ்ணன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட குருக்கள்மடம் சிவநெறிக் கலாமன்றம் நடத்திய அறநெறிக் கலைவிழா,  மட். குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் திங்கட்கிழமை (23) மாலை நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'மலையகத்துக்கும்; வடக்குக்கும் கிழக்குக்குமாக  ஒன்றிணைத்து ஓர்  உறவுப்பாலமாக நான் இங்கு வந்து செயற்பட்டுக்கொண்டிருக்கின்றேன். இந்த செயற்பாட்டை அனைவரும் ஏற்றுக்கொண்டு செயற்படுவதற்கு அனைவரினதும்; ஒத்துழைப்பும் ஆசீர்வாதமும் கிடைக்கவேண்டும்.

இலங்கை அரசியலில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது மட்டுமல்லாமல்,  கிழக்கு மாகாண அரசியலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்பேற்பால் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதைவிட,  தற்போது நாட்டில் தேசிய அரசாங்கம் உருவாகியுள்ளது. இந்த தேசிய அரசாங்கத்தின் மூலம் சிறுபான்மையாக வாழ்கின்ற மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படவேண்டும். அவற்றை  நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். மாறாக, இந்த  தேசிய அரசாங்கமானது  சிறுபான்மை மக்களை நசுக்கும் நிலைமை வந்தால், சிறுபான்மை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்கக்கூடிய நிலைமை ஏற்படும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X