Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 19 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புல்லுமலை காட்டுப்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த டாடா ரக பஸ் வண்டியொன்று இனந்தெரியாதோரினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வியாழக்கிழமை (19) காலை தம்மிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கரடியானாறு பொலிஸார் தெரிவித்தனர்.
புல்லுமலை பிரதான வீதியிலிருந்து அரை கிலோ மீற்றர் தூரத்தில் காட்டுப்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இந்த பஸ் வண்டி புதன்கிழமை (18) தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. புல்லுமலையைச் சேர்ந்த வரதராஜசிங்கம் சகாயராஜா என்பவருக்கு சொந்தமான பஸ் வண்டியே தீக்கிரையாக்கப்பட்டுள்ளது என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago