2025 மே 19, திங்கட்கிழமை

பதினொரு அதிபர்கள் தரம் ஒன்றுக்கு பதவி உயர்வு

Princiya Dixci   / 2015 மார்ச் 25 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரியுதாஜித்
 
மட்டக்களப்பு, கல்குடா கல்வி வலயத்திலிருந்து பதினொரு அதிபர்கள் தரம் ஒன்றுக்கான பதவி உயர்வைப் பெற்றுள்ளனர்.

மட்.களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலயத்தின் அதிபரான கு.சண்முகம், மட்ஃவந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தின் அதிபரான எஸ்.மோகன், மட்ஃபலாச்சோலை விபுலானந்தா வித்தியாலயத்தின் அதிபரான தா.சித்திரவேல், மட்ஃமாவடிவேம்பு விக்கினேஸ்வரா வித்தியாலயத்தின் அதிபரான கி.யோகநாதன், மட்ஃகொம்மாதுறை விநாயகர் வித்தியாலயத்தின் அதிபரான சோ.லெட்சுமணன், மட்ஃகுமாரவேலியார் கிராமம் விக்கினேஸ்வரா வித்தியாலயத்தின் அதிபரான சா.கமலநாதன் மற்றும் மட்ஃவந்தாறுமூலை கண்ணகி வித்தியாலயத்தின் அதிபரான கே.கமலகுமாரி ஆகியோர் என ஏறாவூர் பற்று-02 கோட்டத்திலுள்ள பாடசாலைகளில் கடமையாற்று அதிபர்கள் 7 பேர், இலங்கை அதிபர் சேவை தரம் ஒன்றுக்கு பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

அத்துடன், கோறளைப்பற்றுக் கோட்டத்திலுள்ள மட்ஃசந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலயத்தின் அதிபர் எம்.தவராசா, மட்ஃ.கிண்ணயடி சரஸ்வதி வித்தியாலயத்தின் அதிபர் ரி.இதயராசா, மடஃபேத்தாளை விக்கினேஸ்வரா வித்தியாலயத்தின் அதிபர் ரி.சந்திரலிங்கம் மற்றும் கோறளைப்பற்று கோட்டக் கல்விப் பணிப்பாளர் என்.குணலிங்கம்; ஆகியோரும் இவ்வாறு இலங்கை அதிபர் சேவை தரம் ஒன்றுக்கு பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

இவர்களுக்கான பதவி உயர்வுக் கடிதங்கள், கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தினால் வழங்கப்பட்டன.

கடந்த வருட இறுதியில் நடைபெற்ற நேர்முகப் பரீட்சைக்கு தோற்றியவர்களில் தகுதியானவர்களுக்கே இந்த பதவி உயர்வுக் கடிதங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X