2025 மே 19, திங்கட்கிழமை

தொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு

Princiya Dixci   / 2015 மார்ச் 26 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

இலங்கை தொழிற் பயிற்சி அதிகாரசபையினால் தொழில் பயிற்சிகளை நிறைவு செய்தோருக்கு தொழில் உபகரணங்கள், புதன்கிழமை (25) வழங்கி வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்தில் நடைபெற்ற இந்நிழ்வில், நீர்க் குழாய் பொருத்துநர் மற்றும் கட்டட நிர்மாண கைவினைஞர் (மேசன்) போன்ற பயிற்சிகளை முடித்துக்கொண்ட 13 பேருக்கே இவ்வாறு தொழில் மேம்பாட்டிற்காக தொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதாக பயிற்சி நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.தாஹிர் தெரிவித்தார்.

எகெட் எனப்படும் கிழக்கிலங்கை சமூக பொருளாதார அபிவிருத்தி நிறுவனம் இந்த தொழில் உபகரணங்களை வழங்கியிருந்தது.

தொழில் உபகரணங்கள் வழங்கும் இந்நிகழ்வில் வவுணதீவுப் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், எகெட் நிறுவனத்தின் பணிப்பாளர் ஜெறோன் டிலிமா, இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் உதவிப் பணிப்பாளர் எம்.பி.நளீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X