2025 மே 19, திங்கட்கிழமை

தெங்குச் செய்கையாளர்களுக்கு மானிய உதவி

Suganthini Ratnam   / 2015 மார்ச் 26 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

தென்னங்காணிகளின் அபிவிருத்திக்காக பலவிதமான மானிய உதவிகளை தெங்குச் செய்கையாளர்களுக்கு வருடம் தோறும் வழங்குவதாக மட்டக்களப்பு மாவட்ட தென்னை அபிவிருத்திச் சபையின் திட்டமிடல் அதிகாரி பெருமாள் உதயச்சந்திரன் தெரிவித்தார்.

பணமாகவோ அல்லது உள்ளீடாகவோ தெங்குச் செய்கையாளர்களுக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன.  இந்த நிலையில்,  தென்னங்காணிகளில் நீர்க்குழாய் பதித்தலுக்கு  8,000 ரூபாய்யும் கொட்டகை  அமைப்பதற்கு 35,000 ரூபாய்யும் வழங்கப்படுகின்றன. அத்துடன்,  உள்ளீடாக அரை மானிய விலையில் செவ்விளநீர், தென்னை   நாற்றுக்களும் பொலிப்பையும் வழங்கப்படுகின்றன.

பண மற்றும் மானிய உதவி தேவைப்படுவோருக்கான  விண்ணப்பங்களை மட்டக்களப்பு- மயிலம்பாவெளியிலுள்ள தென்னைப் பயிர்ச்செய்கை சபையின்  பிராந்திய அலுவலகம் தெங்குச் செய்கையாளர்களிடமிருந்து கோரியுள்ளது. விண்ணப்பங்கள் கிடைக்கும் ஒழுங்குமுறையில் தெரிவு செய்யப்படுபவர்களுக்கு பணம் அல்லது உள்ளீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தென்னைப் பயிர்ச் செய்கைச் சபையினால் வழங்கப்படும் கப்றுக ஆயோஜன கடன் திட்டத்துக்காக  2015ஆம் ஆண்டுக்கு இலகு கடன் வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இலகு கடனை 4 சதவீத வருட வட்டியின் அடிப்படையில் எந்த வங்கியினூடாகவும் பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் அவர் கூறினார்.

மேலதிக தொடர்புகளுக்கு மட்டக்களப்பு மயிலம்பாவெளியிலுள்ள தென்னைப் பயிர்ச் செய்கைச் சபை, பிராந்திய அலுவலகத்துடன் 065 2240103, 065 2240924 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X