2025 மே 19, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் டெங்கொழிப்பு வாரம் ஆரம்பம்

Suganthini Ratnam   / 2015 மார்ச் 26 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா

தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவுகளிலும் இன்று  வியாழக்கிழமையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம்.சதுர்முகம் தெரிவித்தார்.

மாவட்டத்தின் பிரதான டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம்  மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவில் ஆரம்பிக்கப்பட்டதுடன், தொடர்ந்து  ஏழு நாட்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபைப் பிரிவில் தேசிய டெங்கு ஒழிப்பு வார நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இன்றையதினம் 19 பிரிவுளாக பிரிக்கப்பட்டு சுமார் ஆயிரம்; இடங்கள் சோதனையிடப்பட்டதாக மாநகரசபை பிரதான பொதுச் சுகாதார பிரிசோதகர் கே.தேவநேசன் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில்  மட்டக்களப்பு பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி என்.ரஞ்சன்  பிரதம அதிதியாக கலந்துகொண்டார். பொதுச்சுகாதார பரிசோதகர்கள், விஷேட அதிரடிப்படையினா,; பொலிஸார், தாதிய உத்தயோகஸ்;தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X