2025 மே 19, திங்கட்கிழமை

மாதிரி விவசாயப்பண்ணையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை

Gavitha   / 2015 மார்ச் 26 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மண்டூர் ஒல்லி வால் மடு வேல்ட்விசன் மாதிரி விவசாயப்பண்ணை சில காலமான மக்களுக்கு பயன்கொடுக்காத வகையில், எதுவித செயற்பாடுகளும் அற்ற நிலையிலேயே இருந்து வருகின்றது.

அதனை, கிழக்கு மாகாண விவசாய அமைச்சினால், மாகாண சபை அமைச்சின் கீழ் கொண்டு வந்து மீண்டும் ஆரம்பிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இது தொடர்பான அமைச்சின் அதிகாரிகளுடனான ஒன்றுகூடல் கூட்டமொன்று புதன்கிழமை (25) மண்டூர் ஒல்லிவால் மடு மாதிரி விவசாயப் பண்ணையில், பண்ணை முகாமையாளர் றொகாஸ் தலைமையில் இடம்பெற்றது.

கடந்த 2015.03.14ஆம் திகதி மண்டூர் கமநல அமைப்புகளுடனான சந்திப்பின் போது, அவர்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய மேற்படி பண்ணையை மீண்டும் செயற்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

அன்றைய தினம் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரினால் மேற்படி பண்ணை நேரில் சென்று பார்வையிடப்பட்டது.
அதன் முதற்கட்டமாக இப்பண்ணையை அமைச்சின் மூலம் எவ்வாறு செயற்படுத்தமுடியும் என்பது தொடர்பாக ஆராயும் முகமாகவே நேற்றைய ஒன்றுகூடல் இடம்பெற்றதுடன். இதன்போது, அமைச்சர் அதிகாரிகள் குழுவினால் பண்ணை பார்வையிடப்பட்டது.

அத்துடன் தும்பங்கேணி கால்நடை வைத்தியர் அலுவலகமும் பால் உற்பத்திபொருள் விற்பனை நிலையமும் அமைச்சின் அதிகாரிகளினால்  பார்வையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம், அமைச்சின் செயலாளர் சிவநாதன், அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களின் மாகாணப் பணிப்பாளர்கள் மற்றும் விவசாய உத்தியோகஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X