2025 மே 19, திங்கட்கிழமை

மகளை கர்ப்பிணியாக்கிய தந்தை கைது

Gavitha   / 2015 மார்ச் 26 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

தனது மகளை துஷ்பிரயோகம் செய்து கர்ப்பிணியாக்கிய 43 வயதான தந்தையை தாம் கைது செய்திருப்பதாக வாகரைப் பொலிஸ் பொறுப்பதிகாரி பி.கே. பாலித்த ஜயரெட்ன தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பொலிஸ் பிரிவிலுள்ள நடுக்குடியிருப்புப் பகுதியில் பெற்றோருடன் வசிக்கும் 14 வயதான  மூத்த மகளையே தந்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்று விசாரணை மூலம் தெரியவந்திருப்பதாக பொலிஸார் கூறினார்.

சுகயீனம் காரணமாக மேற்படி சிறுமி வாகரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அப்போது சிறுமி தெரிவித்த தகவல் மூலம் சிறுமியின் வயிற்றில் வளரும் இரண்டு மாத சிசுவுக்கு அவளது தந்தையே காரணம் என்பது தெரிய வந்திருக்கின்றது.

சிறுமிக்கு மேலும் 4 சகோதரர்கள் உள்ளனரென்றும் சிறுமியின் தாய் சித்த சுவாதீனமுள்ளவர் என்றும் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X