Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 27 , மு.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
இலங்கையில் ஆட்சி மாற்றம் இடம்பெற்றுள்ளபோதிலும், இந்திய அரசாங்கம் இலங்கையில் மேற்கொள்ளும் செயற்றிட்டங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பார்வையாளர்களாகக் கூட அழைக்காமை கவலைக்குரிய விடயம் என்று கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் வியாழக்கிழமை (26) தெரிவித்தார்.
மட்டக்களப்பு, வாகரை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கதிரவெளிக் கிராமத்தில்; இந்திய வீட்டுத்திட்டம் கையளிக்கும் நிகழ்வு புதன்கிழமை (25) நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாமை கவலைக்குரியதுடன், கண்டனத்துக்குரியது என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 'கடந்த காலத்திலிருந்து இலங்கையில் இந்திய அரசாங்கம் மேற்கொண்டுவருகின்ற எந்த செயற்றிட்டத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இணைத்துச் செயற்படவில்லை. அவர்களின் செயற்பாடுகள் இங்குள்ள அரசாங்கத்தின் விருப்பங்களை பூர்த்திசெய்யும் வகையில் அமைந்திருந்தது.
தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக த.தே.கூ. வடக்கு, கிழக்கில் உள்ளபோது, கூட்டமைப்பை கருத்திற்கொள்ளாமல் செயற்படுவது கவலைக்குரியது' என்றார்.
இந்திய அரசாங்கத்தின் 50,000 வீட்டுத்திட்டம் கடந்த அரசாங்க காலத்தில் வழங்கப்பட்டபோது, அதில் பாரிய முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த வீடுகள், அன்றைய ஆட்சியாளர்களின் அபிலாஷைகளை பூர்த்திசெய்யும் வகையில் வழங்கப்பட்டிருந்தன.
அந்த வீட்டுத்திட்டத்துக்குரிய பெரும்பாலான வீடுகள், அந்த அரசாங்கத்தை ஆதரித்தவர்களுக்கே வழங்கப்பட்டிருந்தன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரியமுறையில் வீடுகள் வழங்கப்படவில்லை.
இதேபோன்று, கடந்தகாலத்தில் வாகரை பிரதேசத்தில் 17 அலியா மீன்பிடிப்படகுகள் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டது. ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு படகுகள் வழங்கப்படாமல், தமது உறவினர்களுக்கு பகிர்ந்தளித்துள்ளனர்.
காயங்கேணி மீனவர் சங்கம் என்ற பெயரில் தமது உறவினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இவை பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதுடன், நூறு வீதம் தமிழ் மக்கள் வதியும் வட்டவான் பகுதியில் முஸ்லிம் ஒருவருக்கு மீனவர் சங்கம் என்ற பெயரிலும் படகு வழங்கப்பட்டது.
இவ்வாறு இந்திய உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட உதவிகள் உரியமுறையில் மக்களை சென்றடையவில்லை. அவை அரசியல்வாதிகளின் தேவைகளை பூர்த்திசெய்வதற்கே வழங்கப்பட்டன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இந்தியா இணைந்து செயற்பட்டிருந்தால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் சென்றடைந்திருக்கும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago