Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 27 , மு.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
கடந்த முப்பது வருடகால யுத்தத்தின்போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட வாகரை பிரதேச மக்களின் வாழ்வை கட்டியெழுப்புவதற்கு உதவுமாறு கோரி, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சிங்ஹாவிடம் மகஜரொன்று கையளிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சிங்ஹாவிடம் வாகரை பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகி புதன்கிழமை (25) இந்த மகஜரை கையளித்தார்.
அந்த மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'யுத்தமும் இயற்கை அழிவுகளும் வாகரை பிரதேச மக்களை பாதிப்படையச் செய்துள்ளதால், வறுமையின் பிடிக்குள் அவர்கள் அகப்பட்டுள்ளார்கள்.
யுத்தத்தின் விளைவாக வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் ஆயிரத்துக்கும்; மேற்பட்டோர் கணவனை இழந்து நாளாந்த ஜீவனோபாயத்துக்கு அல்லற்படுகின்றார்கள். இவர்களுக்கு அவ்வப்போது உதவிகள் வழங்கப்பட்டாலும், நிரந்தர வாழ்வாதாரத்துக்கான உதவியாக ஆடைத் தொழிற்சாலை போன்றவற்றை வாகரையில் நிறுவினால் கைம்பெண்களின் குடும்பங்களுக்கு வாழ்வளிப்பதாக அமையும்.
கடல் வளம் நிறைந்துள்ள வாகரை பிரதேச மீனவர்களுக்கு ஒரு மீன்பிடித்துறைமுகம் கூட இல்லை. மேலும், உள்ளூரில் ரின்மீன் தொழிற்சாலையை ஆரம்பித்தால், அதிகளவான உள்ளூர் மக்களுக்கு தொழில்வாய்ப்புகளை வழங்கமுடியும்.
கோடை காலத்தில் நிலத்தடி நீர் வற்றுவதாலும் உப்புக் கரித்த நீர் ஊற்று எடுப்பதாலும் பிரதேச மக்கள் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாட்டை எதிர்நோக்குகின்றார்கள். இந்த மக்களுக்கு சுத்தமான குடிநீர் பெற இந்திய அரசு, உதவவேண்டும்.
வாகரை பிரதேசம் கல்வியில் பின்தங்கியுள்ளதால்;, இந்தப் பிரதேச நிர்வாக அலுவல்களை கவனிக்க தூரப்புற இடங்களிலிருந்து நிர்வாக அதிகாரிகள் வருகின்றனர்.
பிரதேச செயலக அரச அதிகாரிகளின் பயணத்துக்கான சிறப்பு ஏற்பாடாக இந்திய அரசு ஒரு பஸ் வண்டியை தந்துதவவேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago