2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வசதியற்ற குடும்பங்களுக்கு மலசலகூடங்கள் கையளிப்பு

George   / 2015 ஏப்ரல் 20 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி பிரதேசத்தில் ரோட்டரி கழகத்தின், கொழும்பு மிட்டவுன் கிளையின் அனுசணையுடன் அமைக்கப்பட்ட 10 மலசலகூடங்களை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு, காத்தான்குடி வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் நிர்வாகக் கட்டடத்தில் சனிக்கிழமை(18) நடைபெற்றது.

காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழ்; வாழும் குடும்பங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த மலசலகூடங்கள் அமைக்கப்பட்டன.

இதன்போது, ரோட்டரி கழகத்தின் கொழும்பு மிட்டவுன் கிளையின் பிரதிநிதிகளால் வசதியற்ற குடும்பங்களுக்கு மலசலகூடங்களின் ஆவணங்கள் கையளிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X